முதலைக்கடியில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பிக்கும் நபர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

அதிர்ஷ்டம் ஒருமுறை தான் கதவை திறக்கும். அதற்கு ஏரியில் குளிக்கும்போது முதலை கடியில் இருந்து தப்பிய நபர், ஒரு எடுத்துக்காட்டு.
அமெரிக்கா, புளோரிடா மாகாணத்தில் உள்ள ஏரி ஒன்றில் கப்பலில் இருந்த நபர் ஒருவர், கடலில் ஜாலியாக குளித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு இரண்டு முதலைகள் வந்தது. இதனை பார்த்தும் அவர் சிரித்தப்படியே குளித்துக்கொண்டு இருந்தார். அதில் ஒரு முதலை, திடீரென அவரை தாக்கத் தொடங்கியது.
கண் இமைக்கும் நேரத்தில் அதனைக்கண்ட அந்த நபர், உடனடியாக நீரில் இருந்து வெளியேறி, கப்பலில் ஏறினார். இது தொடர்பான வீடியோ, தற்போது சமூகவலைத்தளங்களில் அதிகளவில் பரவிவருகிறது. நொடியில் உயிர் தப்பிய இந்த மனிதர், அஜாக்கிரதையாக இருந்தால் நொடியில் மரணம் என்பதை விளக்குகிறார்.