பேட்மேன் உடையணிந்து வீடற்ற மக்களுக்கு உணவளிக்கும் நபர்! குவியும் பாராட்டுக்கள்!
பேட்மேன் உடையணிந்து வீடற்ற மக்களுக்கு உணவளிக்கும் நபர்.
உலகம் உழுவதும் கொரோன அவைரஸானது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென் அமெரிக்காவில், சிலி தலைநகர் சாண்டியாகோவில் பல மாதங்களாக கொரோனா தோற்றால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பல மக்கள் வீடுகள் இல்லாத நிலையில், உணவின்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத நபர் ஒருவர், பேட்மேன் போன்று மாறு வேடத்தில் உடை அணிந்து, அந்த தெருக்களில் வசிக்கும் மக்களுக்கும் சூடாக உணவுகளை வழங்கி வருகிறார். இவரது இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அந்த நபர் கூறுகையில், ‘உங்களை சுற்றி பாருங்கள். பலருக்கும் உங்களின் சிறிது நேரம், சிறிது உணவு, தங்குமிடம் மற்றும் சில சமயங்களில் சில ஆறுதலான வார்த்தைகள் கூட தேவைப்படும்.’ மேலும், கொரோனா தொற்றால் சிலியில் கொண்டுவரப்பட்டுள்ள ஊரடங்கு, அங்கு பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.