வில்லியம்சன் என்ற 34 வயதான ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு நாளும் 5 லிட்டர் தண்ணீர் குடித்ததால், உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இங்கிலாந்தில், தற்போது புதிய வகை கொரானா வைரஸ் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ள நிலையில், இங்கிலாந்தில் வில்லியம்சன் என்ற 34 வயதான ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவரிடம் சென்றுள்ளார்.
இதனையடுத்து, அவர் ஒவ்வொரு நாளும் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டார். வில்லியம்சன் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடித்துள்ளார். இதனால் அவரது சோடியம் அளவு ஆபத்தான அளவில் குறைந்துள்ளது. இதனை அடுத்து அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. அவரது மனைவி லாரா ஆம்புலன்ஸ்க்கு அழைப்புவிடுத்தார் அதன்பின் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் 20 நிமிடங்களுக்கு மேலாக மூச்சுப் பயிற்சி எதுவும் இல்லாமல் இருந்துள்ளார்.
இதனை அடுத்து, இரண்டு முதல் மூன்று நாட்கள் வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. ஒரு வார காலமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த நிலையில், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனையடுத்து மருத்துவ ஊழியர்கள் அவருக்கு சில சோதனைகளை மேற்கொண்டு, அவரது உடலில் எலக்ட்ரோலைட்களை சரி செய்தனர். பின் அவர் தனது மனைவியுடன் மருத்துவமனையில் இருந்து விடைபெற்று வீட்டிற்கு சென்றுள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…