பொறுப்பான பணிகளை செய்யக்கூடிய நடிகர் யாஷ் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும், அவரது புதிய படமான கேஜிஎப் 2 படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் நீக்கப்பட வேண்டும் எனவும் கர்நாடகா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வெற்றிபெற்ற கேஜிஎப் படத்தின் தொடர்ந்து கேஜிஎப் 2 படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க கூடிய நடிகர் யாஷ் புகைபிடிப்பது போன்ற டீசர் ஒன்று அண்மையில் வெளியாகியது. அதில் யாஷ் எந்திர துப்பாக்கியில் சிகரெட் பற்றவைத்துப் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த டீசர் அதிக பார்வையாளர்களை பெற்று தென்னிந்திய சினிமாவின் முதல் இடத்தையும் பிடித்து இருந்தது. இந்நிலையில் இந்த டீஸருக்கு கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பொறுப்பான பணிகளைச் செய்யக்கூடிய நடிகர் யாஷ் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும், அவரது புதிய படம் ஆகிய கேஜிஎப் 2 படத்தில் அவர் சிகரெட் பிடிக்கக் கூடிய காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் நடிகர்களை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின்பற்றுவது போல அவரது ரசிகர்களும் அவரை பின் தொடர்வார்கள். இதுபோன்ற காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், புகைப்பிடிக்கும் காட்சிகளை நீக்குவது சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் விஷயமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். அரசின் இந்த கருத்து அனைத்து படங்களுக்கும் பொருந்தும் எனவும் கூறியுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…
சென்னை : தமிழகத்தில் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக அரவிந்த் பனகாரியா தலைமையிலான 16-வது நிதிக்கமிஷன் நேற்று வருகை தந்தனர். அதனைத்…
சென்னை : கடந்த 2 வாரங்களாக குறைந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று நாளில் உச்சம் தொட்டுள்ளது. இதனால்…
சென்னை : பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோர் ரயில், பேருந்துகளில் டிக்கெட் கிடைக்காமல் அவதியுறுவதுண்டு. அவர்கள், அரசுப்பேருந்துகளில்…
சென்னை : கடந்த நவ-14 அன்று 3D தொழில்நுட்பத்தில் பெரும் பொருட்செலவில் உருவான கங்குவா திரைப்படமானது தமிழ், மலையாளம், இந்தி,…
ரியோ டி ஜெனிரோ : 19-வது ஜி20 உச்சி மாநாடானது இன்று பிரேசில் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் தொடங்குகிறது.…