டாப்சி நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதி பண்டைய கால அரசரராக நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் விஜய் சேதுபதி, தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கில் ‘Uppena’ படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளார் . மேலும் இவர் காத்து வாக்குல ரண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன், லாபம், இடம் பொருள் ஏவல், கடைசி விவசாயி, கா/பெ ரணாசிங்கம் உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார்.மேலும் கமலின் தலைவன் இருக்கின்றான், அமீர்கானுடன் ஒரு இந்தி படத்திலும் படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
அதனையடுத்து புகழ்பெற்ற இயக்குநரான ஆர். சுந்தர்ராஜனின் மகனான தீபா சுந்தர்ராஜன் இயக்கத்தில் டாப்சி நடிக்கும் படத்திலும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜகபதி பாபு அவர்களும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் ஜெய்ப்பூரில் தொடங்கவுள்ளதாகவும், அதில் ஒரு அரண்மனையில் வைத்து வரலாற்று காட்சிகளான பிளாஷ்பேக் பகுதிகள் படமாக்கப்பட உள்ளதாகவும், இதில் விஜய் சேதுபதி பண்டைய அரசரராக நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…