மனிதனுக்கு பதிலாக மரத்திற்கு முகக்கவசம் கட்டும் பிரான்ஸ் நாட்டு மக்கள்!
பிரான்ஸ் நாட்டில் உள்ள ஹாஸ்நான் பகுதி மக்கள் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க மரத்திற்கு முகக் கவசம் அணிவித்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.
உலகம் முழுவதிலும் கடந்த ஒரு வருட காலங்களாக கொரோன வைரஸின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டறிவதற்காக உலகின் பல நாடுகள் போட்டி போட்டு ஆராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறது. அதில், சில வெற்றியடைந்து இருந்தாலும் முழுவதுமாக அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி என்று இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை. அரசாங்கம் மருந்துகளை நம்பியிருக்காமல் மக்கள் சில விதிமுறைகளை கடைப்பிடிக்கும்படி அவ்வப்போது அறிவுறுத்திக் கொண்டே தான் இருக்கிறது.
ஒருபுறம் ஆராய்ச்சிகள் அதிகரித்து வந்தாலும் மறுபுறம் மக்களின் மூட நம்பிக்கைகளும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனவைரஸ் தொற்றில் இருந்து தப்பிப்பதற்காக வினோதமான வழிபாடுகள் மற்றும் சில இடங்களில் அவர்களின் நம்பிக்கைக்காக வினோதமான செயல் முறைகளை மக்கள் செய்து வருகின்றனர். அதில் ஒன்றாக பிரான்ஸ் நாட்டில் உள்ள ஹஸ்நான் பகுதி மக்கள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக மரங்களில் முக கவசத்தை கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர். காரணம் கேட்டால் அதை தங்கள் நம்பிக்கையுடன் வழிபாடாக செய்துவருவதாக தெரிவிக்கின்றனராம்.