மறைமுகமாக பிக்பாஸ் வீட்டினுள் செல்வதை கூறிய “பகல் நிலவு” ஹீரோ.!

Default Image

பகல் நிலவு தொடரில் ஷிவானிக்கு ஜோடியாக நடித்த அஸீம் மறைமுகமாக பிக்பாஸ் வீட்டினுள் நுழைவதை கூறியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது . அதில் முதல் வாரத்தில் ரேகா வெளியேற வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் நுழைந்தார். அதனையடுத்து இரண்டாம் வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார் . இதனையடுத்து கடந்த வாரம் சிறப்பாக விளையாடிய சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் . இது பலருக்கும் கடும் அதிர்ச்சியாகவே இருந்தது .

சண்டை , சச்சரவுகள்,அழுகை , சந்தோசம் என அனைத்து உணர்வுகளையும் பிரிதிபலிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் தீபாவளி பண்டிகைக்காக களைக்கட்டி வருகிறது . இந்த நிலையில் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியாக நடிகை இந்திரஜா வருவதாக கூறிய நிலையில் அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் பிக்பாஸ் செல்லவில்லை என்று கூறியிருந்தார் .  அதனையடுத்து சீரியலில் நடிக்கும் அஸீம் வைல்ட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டினுள் நுழைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் நடிகர் அஸீம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . அதில் 100 சிங்கங்களை 1 நாய் வழிநடத்தினால் சிறுபடை வந்தாலும் அச்சிங்கங்கள் அனைத்தும் நாயாகிவிடும். இதே 100 நாய்களை 1 சிங்கம் வழிநடத்தினால் பெரும்படையே வந்தாலும் அந்நாய்கள் அனைத்தும் சிங்கங்களாய் உருவெடுக்கும் .

இதில் சிங்கம் என்று  பிக்பாசையும் , நாய்கள் என்று பிக்பாஸ் போட்டியாளர்களை கூறுகிறாரோ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த பதிவுடன் அவர் விஜய் டிவி ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தி உள்ளார் . எனவே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது. இவர் பகல் நிலவு தொடரில் ஷிவானிக்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்