கார்த்தியின் புதிய படத்தை பல கோடிகளுக்கு கைப்பற்றிய OTT நிறுவனம்.!
நடிகர் கார்த்தி தற்போது விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்களை தொடர்ந்து குக்கூ படத்தை இயக்கிய ராஜூமுருகன் இயக்கத்தில் ஒரு பான் இந்தியா திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை என்றாலும், கூட அவ்வப்போது இந்த படம் குறித்த தகவல் இணையத்தில் வைரலாவது வழக்கம். அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு கார்த்தி -ராஜு முருகன் இணையும் அந்த படத்திற்கு “ஜப்பான்” என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்தது.
இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தை வரும் 2024-ஆம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியீட திட்டமிட்டுள்ளார்களாம். படத்தின் அறிவிப்பு கூட இன்னும் வெளியாகாத நிலையில், தற்போது படத்தின் OTT-உரிமத்தை வாங்கிய நிறுவனம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இந்த ஜப்பான் திரைப்படத்தை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும், கிட்டத்தட்ட ரூ. 24 கோடி கொடுத்த இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படியுங்களேன்-மதுரை சம்பவம் லோடிங்…. “குருதி ஆட்டம்” இயக்குனர் சொன்ன சீக்ரெட்.! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!
மேலும். கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் படம் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதியும், பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30 தேதியும், சர்தார் திரைப்படம் வரும் அக்டோபர் 24-ஆம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.