ஒரே வாந்தியா வருது, ஆனால் ஏன் வருதுன்னு தெரியல? தெரிஞ்சிக்கலாம் வாங்க!!
பொதுவாக உடல் நிலை சரியில்லாதவர்கள் வாந்தி எடுப்பது சகஜம். ஆனால், எதற்காக வாந்தி வருகிறது என்பது யாருக்கும் தெரிவதில்லை. மூளையின் பின்பகுதியில் உள்ள முகுளத்தில் வாந்தி மையம் உள்ளது. இது தூண்டப்படும்போது வாந்தி வருகிறது.
வாந்தி நல்லதா? கெட்டதா?
வாந்தி என்பது வயிற்று பிரச்சனையால் ஏற்படக்கூடிய ஒரு குறி தான். இது ஒரு தனிப்பட்ட நோய் அல்ல, னாய் வருகிறது என்பதை குறிக்கும் குறியீடு தான். வயிற்றுக்குள் உள்ள தேவையில்லாத கழிவுகள், வயிற்றில் தங்க முடியாத உணவுகள் தான் வெளிவருகிறது. எனவே வாந்தி எடுப்பது நல்லது தான். ஆனால், தொடர்ச்சியான வாந்திகளை நல்லதல்ல, மருத்துவரை அணுகவேண்டும்.
வாந்திக்கான காரணங்கள்:
இரைப்பைப் புண், இரைப்பையில் துளை விழுவது, முன் சிறுகுடல் அடைப்பு, உணவுக் குழாய்ப் புற்றுநோய், இரைப்பைப் புற்று. வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, குடல்புழு, குடல்வால் அழற்சி, மஞ்சள் காமாலை, கணைய அழற்சி, பித்தப்பை பிரச்சினைகள், சிறுகுடல் அடைப்பு, சிறுகுடல் துளை, சிறுநீர்ப் பாதை அழற்சி, சிறுநீரகக் கல், வலி நிவாரணி மாத்திரைகள், புற்றுநோய் மருந்துகள் ஆகியவை வாந்தியை ஏற்படுத்தும். அதுமட்டுமல்லாமல், கெட்டு போன உணவுகளை உண்பதும், அளவுக்கதிகமாக ஒத்துக்கொள்ளாத உணவுகளை உண்பதும் இதற்கான காரணம் தான்.