மரியாதை எதிர்ப்பார்ப்பவருக்கு மற்றுள்ளவர்களுக்கு மரியாதை கொடுக்க தெரியவில்லை என்று பாலாஜியை சோம் நண்பர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ள சோம் சேகர் மார்ஷியல் தற்காப்பு கலையை பயின்றவர் . ஆனால் அதனை வீட்டினுள் காண்பிக்காமல் சமாதான புறாவாக சென்று கொண்டிருக்கிறார் . கடந்த வாரம் முதல் போட்டிக்குள் இறங்கி ஆட தொடங்கி உள்ளார் .அதில் வீட்டு தலைவருக்கான டாஸ்க்கில் சோம் தனியாக 200 பந்துகளை எடுத்தார் . ஆனால் அங்கு பாலாஜி செய்து தந்திரத்தால் சம்யுக்தாவிற்கு கேப்டன்ஷிப் சென்றது . அதே போன்று நீதிமன்ற மேடை டாஸ்க்கில் பாலாஜிக்கு எதிராக நின்று வெற்றி பெற்றார் .
இந்த நிலையில் சோம் குறித்தும், மற்ற போட்டியாளர்கள் குறித்தும் சோம் அவர்களின் நண்பர்கள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் சம்யுக்தா மீது எங்களுக்கு காண்டாக உள்ளது . அவரவர் விளையாட்டை அவரவர் விளையாடாமல் பாலாஜியுடன் இணைந்து விளையாடி தலைவராகியுள்ளார் .சோம் மட்டுமே 200 பந்துகளை சேகரித்தார் . ஆனால் பாலாஜி மற்றும் சம்யுக்தா இணைந்து 260 பந்துகளை மட்டுமே சேகரிக்க முடிந்தது .முறைகேடாக விளையாடி வெற்றி வெற்றி பெற்றார் சம்யுக்தா என்று கூறியுள்ளனர் .
மேலும் அவர்கள் பாலாஜி குறித்து கூறிய போது , தனக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்றும், அவன் இவன் என்று அழைக்க கூடாது என்றும் கூறிய பாலாஜி மற்ற போட்டியாளர்களுக்கு மரியாதை கொடுக்கவில்லை என்றும் , தனக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் பாலாஜிக்கு மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற இங்கிதம் தெரியவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளனர் . மேலும் சோம் குறித்து கூறிய அவரது நண்பர்கள், மார்ஷியல் தற்காப்பு கலையை பயின்றவர் என்றாலும் அவர் அடிதடியை விரும்பாதவர் என்று கூறியுள்ளனர் .
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…