2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் பாரிஸ்…!
2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூலை 23 ஆம் தேதி கோலாகலமாக 32-வது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது.இந்த ஒலிம்பிக் போட்டியில் 205 நாடுகளைச் சேர்ந்த 11,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.குறிப்பாக,இந்தியாவில் இருந்து மொத்தம் 127 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
அதன்படி நடைபெற்ற போட்டிகளின் முடிவில்,பதக்க பட்டியலில் அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என 113 பதக்கங்களுடன் முதல் இடமும்,சீனா 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 88 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும் இருந்தது.போட்டியை நடத்திய ஜப்பான் 27 தங்கப்பதக்கங்களுடன் 3 வது இடத்தையும்,இந்தியா 1 தங்கம் உட்பட 7 பதக்கத்துடன் 48 வது இடத்தையும் பெற்றன.
இதனையடுத்து,கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி நிறைவு விழா முடிவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாகிடமிருந்து அடுத்ததாக 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாடான பிரான்சிடம் ஒலிம்பிக் தீபம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து,விமானம் மூலம் பிரான்ஸ் வீரர், வீராங்கனைகளுடன் வந்த ஒலிம்பிக் கொடிக்கு பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில்,வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பிரான்சில் நடைபெறவுள்ளதை முன்னிட்டு பாரீஸில் உள்ள சிட்டி ஹாலில் ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது.கொடியை பாரீஸ் மேயர் அன்னே ஹிடல்கோ (Anne Hidalgo) ஏற்றினார்.
Let’s get it started!
Les Jeux Olympiques de #Paris2024 commencent !
Ouvrons ensemble un nouveau chapitre des Jeux.Together, let’s write a new chapter of the Olympic Games.
????????⚫️???????? pic.twitter.com/0QGjXfpvGY
— Paris 2024 (@Paris2024) August 8, 2021
மேலும்,இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“இந்தக் கொடியானது ஒலிம்பிக்கின் சின்னம்,இப்போது,பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு வருகிறது, அது மிக வேகமாக செல்லும் என்பதற்கான அடையாளமாகும்” என்று கூறினார்.
மேலும்,”கொரோனா தொற்றுநோய் காரணமாக டோக்கியோ விளையாட்டுகள் மிகவும் கடினமான சூழ்நிலையில் ஏற்பாடு செய்யப்பட்டன.இதனால்,பிரான்ஸ் விளையாட்டு அமைப்பாளர்கள், பாதுகாப்பு பிரச்சினைகள் உட்பட பாரிஸ் விளையாட்டுக்கு தயாராவதற்காக,ஒலிம்பிக் போட்டிகளை நடத்திய ஜப்பானிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பார்கள்”,என்று மேலும் கூறினார்.
அவரை தொடர்ந்து,ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் டோனி எஸ்டாங்குவெட் கூறியதாவது,”இந்த ஒலிம்பிக் கொடியை பாரிசுக்கு கொண்டு வருவதற்கு நாங்கள் 100 வருடங்கள் காத்திருக்கிறோம்.தற்போது எங்கள் குழு மற்றும் பிரான்சில் உள்ளவர்கள் மிகவும் உற்சாகமாக உள்ளார்கள்” என்று கூறினார்.
பாரீஸ் நகரம் கடைசியாக 1924 இல் ஒலிம்பிக் போட்டியை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.