நாளை டாக்டர் படத்தின் டிரைலர் வெளியீடு.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
டாக்டர் படத்தின் டிரைலர் வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “டாக்டர்”. இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 26 – ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.
அதன் பின் படம் ஓடிடியில் வெளியாகுமா அல்லது திரையரங்குகளில் வெளியாகுமா என்ற குழம்பம் ரசிகர்களுக்கு மத்தியில் நிலவியது. அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேஜேஆர் நிறுவனம் வரும் அக்டோபர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அடுத்ததாக ரசிகர்கள் அனைவரும் டாக்டர் படத்தின் டிரைலர்-காக காத்துள்ளனர். அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் டாக்டர் படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
Our #DOCTORTrailer will be releasing on 25th September. A ‘Vera Mari’ entertainment awaits you… ????????#DOCTOR #DOCTORFromOct9@Siva_Kartikeyan | @Nelsondilpkumar | @KalaiArasu_ | @kjr_studios | @anirudhofficial | @priyankaamohan | @KVijayKartik | @nirmalcuts | @SonyMusicSouth pic.twitter.com/VJAzyuuvDl
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) September 23, 2021