நடிகர் நடிகை உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி தளம் காப்பாற்றும் – நடிகை வித்யாபாலன்

தனக்குஓ.டி.டி தளங்கள் மீது ஈடுபாடு உண்டு என்றும், நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி தளங்கள் காப்பாற்றும் நடிகை வித்யாபாலன் தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திரையுலகமே முடக்கப்பட்டு இருந்த நிலையில், தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான புதிய படங்கள் ஓ.டி.டி தளங்களில் வெளியானது. இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த ஓ.டி.டி தளத்தில் சூர்யாவின் சூரரைப்போற்று, விஜய் சேதுபதி க/பெ ரணசிங்கம், ஜெயம் ரவியின் பூமி, நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன், கீர்த்தி சுரேஷின் பென்குயின், சந்தானம் நடித்துள்ள பிஸ்கோத்து போன்ற படங்கள் வெளியானது.
இந்தியில் மொழியில் பத்துக்கு மேற்பட்ட படங்கள் ஓ.டி.டி தளத்தில் வெளி வந்துள்ளன. இந்நிலையில் ஓ.டி.டி தளத்தில் படம் வெளியிடுவது குறித்து, பிரபல இந்தி நடிகை வித்யாபாலன் அவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘தனக்குஓ.டி.டி தளங்கள் மீது ஈடுபாடு உண்டு என்றும், நடிகர் நடிகைகள் உள்ளிட்ட பலரது வாழ்க்கையை ஓ.டி.டி தளங்கள் காப்பாற்றும் என்றும், புதிய படங்களை வெளியிட தியேட்டர் கிடைக்காதவர்களுக்கு ஓ.டி.டி தளங்கள் கைகொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், விரைவில் ஓ.டி.டி தொடர்களில் நடிக்கலாம் என்று இருக்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025