முதலிடத்தில் சூப்பர் ஸ்டார்! இரண்டாவது இடத்தில் தளபதி!
- முதலிடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
- இரண்டாவது இடத்தில் தளபதி விஜய்.
தமிழ் சினிமாவில் பிரபலமாக பேசப்படும் நடிகர்களின் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதுண்டு. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக வெளியான ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், தர்பார் இந்தியாவில் மட்டுமல்லாது, வெளிநாடுகளிலும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இப்படம் இதுவரை சென்னையில் மட்டும் ரூ.11 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம். இதற்கு முன்பதாக எந்திரன், கபாலி, காலா, 2.0, பேட்ட என 5 படங்களும் சென்னையில் மட்டும் 10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
தற்போது தர்பார் திரைப்படம் 6-வது முறையாக இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதற்கு அடுத்ததாக தளபதி விஜயின் தெறி, மெர்சல், சர்கார், பிகில் ஆகிய நான்கு படங்களும் 4 முறை 10 கோடிக்கு மேல் வசூல் செய்து ரஜினிக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.