குண்டு வெடிப்பில் 35 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட பலியானவர்களின் எண்ணிக்கை 207 ஆக உயர்ந்தது
நேற்று ஈஸ்டர் பண்டிகையை யொட்டி பல தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்று வந்தது. இலங்கையில் உள்ள பல தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.
இந்நிலையில் இலங்கையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் தேவாலயம் என 7 இடங்களில் குண்டு வெடித்ததில் 150 -க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர். 280-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பிறகு மாலையில் தெமட்டகொடாவில் குடியிருப்பு பகுதியில் 8-வது குண்டு வெடித்து. இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 207ஆக அதிகரித்தது. மேலும் 500 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இறந்தவர்களில் 35 பேர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதல் காரணமாக இலங்கையில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.மேலும் பள்ளிகளுக்கு 2 நாள்கள் விடுமுறை அளித்தனர்.
இந்நிலையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்ததாகவும். குண்டு வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தியவர்கள் தற்கொலை படையை சேர்ந்தவர்கள்.
மேலும் இலங்கையில் வதந்தி செய்திகள் பரவாமல் இருக்க தொலைத்தொடர்புகள் மற்றும் வலைத்தளங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உதவிகள் மற்றும் தகவல்களை பெறுவதற்கு +94777903082 +94112422788 +94112422789 என்ற எண்களை தொடர்பு கொள்ளுமாறு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.