கொரோனாவிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை 1.72 கோடியாக அதிகரித்துள்ளது!

உலகம் முழுவதிலும் கொரோனாவிலிருந்து குணமாகியவர்கள் எண்ணிக்கை 1.72 கோடியாக அதிகரித்துள்ளது.
நாளுக்கு நாள் உலகம் முழுவதிலும் தீவிரமடையும் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதிலும் 24,911,708 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 841,331 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் தவிர இதுவரை உலகம் முழுவதிலும் 17,299,869 பேர் குணமாகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் 284,967 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 5,710 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,768,466 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!
April 18, 2025