அணு உலை பாதுகாப்பாக உள்ளது;உக்ரைன் அதிபருடன் பேசினாரா புடின்?..!

Default Image

உக்ரைனில் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் ரஷ்யா,இன்று 9-வது நாளாக தனது ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தி, உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது.

குறிப்பாக முக்கிய கட்டடங்கள் மற்றும் டவர் உள்ளிட்ட இடங்களை குறித்துவைத்து தாக்குதல் நடத்துகிறது. இதில் உக்ரைனில் உள்ள கெர்சன் உள்ளிட்ட முக்கிய நகரங்களையும் ரஷ்யா கைப்பற்றி வருகிறது.எனினும்,கார்கிவ் நகரை கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில்,உக்ரைனின் சப்ரோசியாவில் உள்ள அணுமின் நிலையத்தில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் குலேபா தெரிவித்திருந்தார்.

Ukraine nuclear plant

ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையத்தை ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருவதாகவும்,அணுமின் நிலையம் வெடித்தால் செர்னோபில் அணு உலை விபத்தை விட 10 மடங்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எச்சரித்தார்.

இந்நிலையில்,சப்ரோசியா அணுமின் நிலையத்தை ரஷ்ய தாக்கிய நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ரஷ்ய அதிபர் புடின் பேசியதாக கூறப்படுகிறது.

இதனிடையே,ரஷ்யா தாக்கிய நிலையில் சப்ரோசியா அணுமின் நிலையம் பாதுகாப்பாக இருப்பதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்