2018ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு ..!வில்லியம் நார்தாஸ், பால் ரோமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது …!
2018ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வில்லியம் நார்தாஸ், பால் ரோமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நோபல் பரிசு என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் பரிசு ஆகும்.இந்த நோபல் பரிசு 1901ஆம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.
2018ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு குறித்து நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று (அக்டோபர் 8 ஆம் தேதி ) அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விருது 2 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவை சேர்ந்த வில்லியம் டி.நார்தாஸ்,பால்.எம்.ரோமர் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.இவர்கள் இருவரும் பொருளாதாரர் நிபுணர்கள் ஆவார்கள்.
பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய பொருளாதார ஆய்வுக்காக வில்லியம் டி.நார்தாஸ்க்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்டகால அடிப்படையிலான பொருளாதாரத்திற்கு உதவும் தொழில் நுட்ப கண்டுபிடிப்புக்கு பால்.எம்.ரோமருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.