ஜப்பானில் முதியோர் இல்லத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த 19 முதியவர்களை கொடூரமாக கொலை செய்த 26 வயதுடைய இளைஞர் சதோஷி உமாத்சு.
ஜப்பானின் சாகமிஹாரா என்ற பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி கையில் கத்தியுடன் இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவர் கையில் வைத்திருந்த கதியில் ரத்தத்துடன் பார்த்த போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை, அந்த இளைஞரின் பெயர் சதோஷி உமாத்சு (26 வயது) ஜப்பானில் சுகுய் லில்லி கார்டன் என்ற ஊனமுற்றவர்களுக்கான முதியோர் இல்லத்தில் 3 ஆண்டுகள் பணியாற்றி வந்துள்ளார். ஆனால் அவருக்கு ஊனமுற்றவர்களை கண்டால் வெறுப்பு ஏற்படும். இதன் காரணமா கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பணியிலிருந்து வெளியேறியுள்ளார்.
இதையடுத்து, 4 மாதங்கள் கழித்து ஜூலை 26 ஆம் தேதி அன்று நள்ளிரவு பணிபுரிந்த முதியோர் இல்லத்திற்குள் நுழைந்து, அங்கிருந்த 19 முதியவர்களை கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நடந்த அன்று முதியோர் இல்லத்தில் 149 முதியோர்களும் மற்றும் 9 ஊழியர்களும் இருந்துள்ளனர். நள்ளிரவில் தூக்கத்தில் இருந்த முதியவர்களை வரிசையாக கழுத்தை குறிவைத்து கொலை செய்துள்ளார். இதில், 19 பேர் சம்பவயிடத்தில் கொல்லப்பட்டதுடன், 26 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். பின்னர் வருவதற்குள் அந்த கொடூரன் அங்கிருந்து தப்பித்துவிட்டான். ஆனால், அந்த கொலைகார கொடூரன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளான்.
பின்னர் கைது செய்த போலீஸ் அதிகாரிகளிடம் ஊனமுற்றவர்கள் நாட்டிற்கு பாரம் என்றும் அவர்கள் உயிருடன் இருப்பது வீண் என கூறியுள்ளான். இதனிடையே முதியவர் இல்லத்தில் இருந்து வெளியேறும் சில மாதங்களுக்கு முன்பு அரசியல்வாதி ஒருவருக்கு கடிதம் எழுதியுள்ளான். அதில், ஊனமுற்ற முதியவர்களை கருணைக்கொலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும், தானே அந்த பணியை செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளான். அதுமட்டுமின்றி தனது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை அந்த கடிதத்தில் எழுதியுள்ளான்.
இந்த கடிதம் தொடர்பாக அவனை போலீசார் கைது செய்து, பின் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அந்த இளைஞருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. 2 வார சிகிச்சைக்கு பிறகு மார்ச் 2 ஆம் தேதி விடுவிக்கப்பட்ட உமாத்சு, சுமார் 146 நாட்களுக்கு பின்னர் இந்த கொடூர கொலைகளை செய்துள்ளார். விசாரணையின் போது, தான் செய்ததில் எந்த வருத்தமும் இல்லை என்று கூறிள்ளார். கடந்த ஜனவரி மாதம் நீதிமன்ற விசாரணை தொடங்கிய நிலையில், உமாத்சு மீது 19 கொலை வழக்கும், 26 கொலை முயற்சி வழக்கும் நிரூபிக்கப்பட்டன. இதனால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள உமாத்சு, ஜப்பானில் உள்ள சிறை ஒன்றில் மரணத்தை நோக்கி காத்திருக்கிறார்.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…