அடுத்த அமெரிக்க அதிபர் ஜோ பைடனா.? 238 இடங்களில் தொடர்ந்து முன்னிலை.!
அமெரிக்கா அதிபர் தேர்தலில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் ஜோ பைடன்.
அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, 238 சபை ஓட்டுகளில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார் ஜோ பைடன்.
ரொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பின்னடைவில் உள்ளார். இவர் 213 சபை ஓட்டுகள் இதுவரை பெற்றுள்ளார். இன்னும் வெற்றி பெற 57 இடங்கள் தேவைப்படுவதால், ஜோ பைடன் அடுத்த அமெரிக்கா அதிபராக ஆவார் என்று எதிரிபார்க்கப்படுகிறது.
இருப்பினும், வாக்கு எண்ணிக்கை முடிவில் மட்டுமே யார் அடுத்த அமெரிக்க அதிபர் என்று தெரியவரும். ஏனெனில், முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம். இதனால் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கும் உலக நாடுகள்.
இதனிடையே, இந்த தேர்தலில் தனித்துவமான வெற்றியை பெற்றுள்ளோம். அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது. தேர்தலில் மோசடி நடைபெற்றுள்ளதால் நீதிமன்றத்தை அணுகி வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவேன் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுவரை ஜோ பைடனுக்கு 49.8% (6,70,97,865) வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. டிரம்புக்கு 48.6%
(6,54,24,838) வாக்குகள் எண்ணப்பட்டுள்ளது. பைடன் வெற்றி பெற இன்னும் 32 இடங்கள் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.