தனுஷின் “கர்ணன்” படத்திற்கு வந்த அடுத்த சிக்கல்..!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படத்தின் தலைப்பை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்றும் சிவாஜி சமூக நலப்பேரவை கோரிக்கை வைத்துள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகும் திரைப்படங்களில் ஒன்று கர்ணன் .மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார் . சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தில் யோகி பாபு,லால் பட்டி எனும் நடராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தாணு தயாரிக்கும் இந்தப் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது கர்ணன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் கர்ணன் படத்தின் தலைப்பு வைக்கும் பொழுது நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ரசிகர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அந்த தலைப்பை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என்றும் சிவாஜி சமூக நலப்பேரவை கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பட தயாரிப்பாளர் இந்த கோரிக்கையை ஏற்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதனை பற்றிய மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025