அடுத்த வாழ்க்கை வரலாறு படத்தால் கீர்த்தி சுரேஷ்க்கு ஏற்பட்ட சிக்கல் அதிர்ச்சியில் ரசிகர்கள்.
பழம்பெரும் நடிகையான சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமான நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்து அதற்காக தேசிய விருதையும் பெற்றவர் கீர்த்தி சுரேஷ். தற்போது தெலுங்கில் பிரபல நடிகையான விஜயநிர்மலாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க போவதாக தகவல் வெளியானது. விஜய் நிர்மலா, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். அது மட்டுமின்றி, 44படங்களை இயக்கிய பெண் இயக்குநர் என்ற பெருமையை பெற்றது மட்டுமில்லாமல் கின்னஸ் சாதனையும் படைத்தவர். இவர் பணமா பாசமா, ஞான ஒளி போன்ற படங்களில் நடித்த நடிகரான கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவரே சிவாஜி கணேசனை வைத்து படம் எடுத்த பெண் இயக்குநர். அதனையடுத்து இவர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் தனது 73 வது வயதில் உயிரிழந்தார்.
இந்த நிலையில் தற்போது விஜயநிர்மலாவின் மகனான நடிகர் நரேஷ் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். தனது தாயாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை என்றும், அவ்வாறு வந்த செய்திகள் யாவும் பொய் என்றும் கூறியுள்ளார். மேலும் தனது தாயாரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுப்பதற்கான கதையை சில ஆண்டுகளுக்கு முன்பு தான் எழுதியதாகவும், அதற்கு தனது தாயார் உதவி செய்ததாகவும் கூறியுள்ளார். ஆனால் தாயாரின் மறைவுக்கு பின்னர் அந்த பணிகள் யாவும் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும், விரைவில் அதை எழுதி முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். எனவே தனது தாயாரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க போவதாக கூறிய தகவல்கள் அனைத்தும் வதந்தி என்று கூறியுள்ளார். இதனால் கீர்த்தி சுரேஷின் அடுத்த படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…
லண்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் அக்கட்சி பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ளும்…