திரு.விவேக் அவர்களின் மரணச் செய்தி பெரும் கவலை அளிக்கிறது – பா ரஞ்சித்..!!
விவேக் அவர்களின் பிரிவில் வாடும் திரை உலகிற்க்கும், ரசிகர்களுக்கும், குடும்பத்தாருக்கும் தனது இரங்கலை இயக்குனர் பா ரஞ்சித் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நகைசுவை நடிகர் விவேக், நேற்று காலை மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் தங்களது இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில் இயக்குனர் பா ரஞ்சித் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், சிறந்த நகைச்சுவை கலைஞர் நடிகர் திரு.விவேக் அவர்களின் மரணச் செய்தி பெரும் கவலை அளிக்கிறது. அவரின் பிரிவில் வாடும் திரை உலகிற்க்கும், ரசிகர்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். என்று தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.
சிறந்த நகைச்சுவை கலைஞர் நடிகர் திரு.விவேக் அவர்களின் மரணச் செய்தி பெரும் கவலை அளிக்கிறது. அவரின் பிரிவில் வாடும் திரை உலகிற்க்கும், ரசிகர்களுக்கும், குடும்பத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்!! #RIPVivekSir
— pa.ranjith (@beemji) April 17, 2021