டெஸ்லாவின் புதிய நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலை..! காலேஜ் டிகிரி தேவையில்லை..!
டெஸ்லா அதன் புதிய நிறுவனத்தில் 10,000 பேரை வேலைக்கு அமர்த்த முடிவுசெய்துள்ளது.ஆச்சரியம் என்னவென்றால் இங்கு வேலைக்கு சேர காலேஜ் டிகிரி கட்டாயமில்லை.
டெஸ்லா நிறுவனம்,டெக்சாஸில் உள்ள அதன் இரண்டாவது அமெரிக்க கார் தொழிற்சாலையான ‘ஜிகாஃபாக்டரிக்கு’ 2022ம் ஆண்டிற்குள் 10,000 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு அதிகாரிகளில் ஒருவரான கிறிஸ் ரெய்லி, “டெக்சாஸ் ஜிகாஃபாக்டரியில் உற்பத்தி, டிசைன், கட்டிடக்கலை, கட்டுமானம் உள்ளிட்ட பதவிகளுக்கான இடங்கள் உள்ளன.ஆகையால் யார் வேண்டுமானாலும் வேலை செய்ய வாய்ப்புகள் உள்ளன.எனவே வெளியில் இருந்து வரும் தனிநபர்கள் இந்த வேலையில் ஆர்வம் கொண்டவர்களாகவும், வித்தியாசமான ஒன்றை உருவாக்க விரும்புகிறார்களாகவும் இருக்க வேண்டும்.மேலும் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள்கூட இதற்கு விண்ணப்பிக்கலாம். இதனால் வேலை செய்து கொண்டு உங்கள் கல்வியைத் தொடரமுடியும்.”,என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து எலோன் மஸ்க், “டெக்சாஸில் உள்ள ஜிகாஃபாக்டரிக்கு 2022க்குள் 10,000 க்கும் மேற்பட்டோர் தேவைப்படுகிறார்கள், ஃபாக்டரிக்கு செல்ல விமான நிலையத்திலிருந்து 5 நிமிடங்கள், நகர்புறத்திலிருந்து 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். எனவே உங்கள் போக்குவரத்திற்கான நேரம் குறையும்.ஆகையால் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கல்லூரி முடித்திருக்க வேண்டிய அவசியமில்லை. உயர்நிலைப் பள்ளியை முடித்த நபர்களுக்கு இங்கு எப்போதும் வேலை உண்டு”என்று கூறி மக்களை விண்ணப்பிக்க ஊக்குவித்துள்ளார்.