கனடாவில் ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதி… சர்வதேச மாணவர்களுக்கு சிக்கல்!

Student Permit

கல்வி முறையின் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் அரசின் உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையில், கனடாவில் கல்வி கற்பதற்காக செல்லும் இந்திய மாணவர்கள் உட்பட சர்வதேச மாணவர்களின் அனுமதி கட்டணம் உள்ளிட்ட தங்களின் செலவுகளை இரட்டிப்பாக அதிகரித்து அந்நாட்டு அமைச்சர் மார்க் மில்லர் அறிவித்துள்ளார். அதாவது, கல்வி கற்பதற்கான அனுமதிக்கு விண்ணப்பித்து கனடாவுக்கு வரும் சர்வதேச மாணவர்களுக்கான கட்டணம் உள்ளிட்ட செலவின் நிதி தேவையை இரட்டிப்பாக உயர்த்தி அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்த நடைமுறை ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்றும் கூறியுள்ளார். இந்த நடைமுறை இந்தியா உட்பட வெளிநாட்டு மாணவர்களின் வருகையை பாதிக்கும் என கூறப்படுகிறது. கனடாவில் கல்வி கற்பதற்காக செல்லும் இந்திய மாணவர்கள் உட்பட சர்வதேச மாணவர்களில் பலர், அங்கு பார்க்கும் பகுதி நேர வேலை மூலம் வரும் வருவாயை வைத்துத்தான் தங்கள் செலவுகளை பார்த்துக்கொள்கின்றனர்.

அதன்படி, கல்விக் கற்க வரும் சர்வதேச மாணவர்கள் கனடாவில் வாரம் ஒன்றுக்கு 20 மணி நேரம் மட்டுமே வேலை பார்க்க அனுமதி என்ற கட்டுப்பாடு இருந்தது. ஆனால்,  பணியாளர் பற்றாக்குறை காரணமாக, 2022ம் ஆண்டு நவம்பர் மாதம், அந்தக் கட்டுப்பாட்டை நீக்கி, சர்வதேச மாணவர்கள் வாரம் ஒன்றிற்கு 20 மணி நேரத்துக்கும் கூடுதலான நேரம் பணி செய்ய அனுமதியளிக்கப்பட்டது.

இந்த சூழலில் கனடாவில் சர்வதேச மாணவர்கள் 20 மணி நேரத்துக்கும் கூடுதலான நேரம் வேலை பார்க்கலாம் என்று அனுமதியளிக்கப்பட்ட விதி, இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், இதனை 2024 ஏப்ரல் 30ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய அமெரிக்க அதிபரின் மகன்.! ஜோ பைடன் அரசியலுக்கு புதிய சிக்கல்.?

அதுமட்டுமில்லாமல், கனடாவில் கல்வி கற்பதற்காக செல்லும் இந்திய மாணவர்கள் உட்பட சர்வதேச மாணவர்களின் கல்வி கற்பதற்கான அனுமதி கட்டண செலவு (Double Financial Criteria For Student Permit) உள்ளிட்ட தங்களின் செலவினங்களை இரட்டிப்பாக அதிகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜனவரி 1 முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருங்கால சர்வதேச மாணவர்களுக்கான அதிகரித்த நிதி தேவை USD 20,635-ஆக உயர்த்தப்படுகிறது என்றும் இது ஏற்கனவே இருந்த USD 10,000 என்ற வரம்பை இரட்டிப்பாக்குகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இந்தியா உட்பட வெளிநாட்டு மாணவர்களின் வருகையை பாதிக்கும் என்றும் அதே சமயம் மாணவர்களின் செலவை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த புதிய மாற்றம் சர்வதேச மாணவர்களின் பயணம், கல்வி அனுமதி கட்டண செலவுகள் மற்றும் கூடுதலாக தங்கள் செலவுகளை ஈடுகட்ட போதுமான நிதி இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வாழ்க்கைச் செலவுகளுக்கான கனடா புள்ளிவிவரங்களின் அடிப்படையில் ஆண்டுதோறும் இந்தத் தொகை சரிசெய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நடைமுறையில் சர்வதேச மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy