இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “கோப்ரா”. இந்த படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அடுத்ததாக கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி நிறுத்தி எடுக்கப்பட்டது. அதன் பின் இறுதியாக இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்திலிருந்து வெளியான பாடல் மற்றும் டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்த அப்டேட்டாக இரண்டாவது பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு நாளை விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு அறிவிக்கப்படும் என செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அறிவித்துள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…