அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு வந்த புதிய சிக்கல்..??

அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக வருகின்ற மே 10 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளதாக தகவல்.
இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதி பாபு, போன்ற பல நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பில் நயன்தாராவும், ரஜினியும் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக 1 வாரம் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பின் போது 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்திற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவர்க்கு கொரோனா இல்லை என்று தெரியவந்தது, ஆனால் ரஜினிக்கு இரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
அதற்கு பிறகு மீண்டும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு சில காட்சி மட்டும் ஹைதராபாத்தில் வைத்து படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025