ஆர்யாவின் சல்பேட்டா பட இயக்குநரான பா. ரஞ்சித் அவர்கள் குத்து சண்டை செய்வதை போன்ற புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் அட்டகத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் பா. ரஞ்சித். மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து கார்த்தி நடிப்பில் மெட்ராஸ் என்னும் திரைப்படத்தை இயக்கி ஒட்டு மொத்த திரையுலகத்தையும் தன்பக்கம் திரும்பி பார்க்க செய்தார். அதனையடுத்து சூப்பர் ஸ்டாரை வைத்து கபாலி மற்றும் காலா போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கி பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இயக்குநராக கலக்கிய இவர் ஒரு சில படங்களை தயாரித்தும் வெற்றியை கண்டார். ஆம் பா. ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் மூலம் பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். இவை அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது ஆர்யாவின் நடிப்பில் உருவாகி வரும் சல்பேட்டா என்னும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஒரு வடக்கு சென்னை குத்து சண்டை வீரர்களை மையமாக கொண்டு உருவாகும் படமாகும். இதில் ஆர்யா குத்து சண்டை வீரராக களமிறங்குகிறார். அதற்காக ஆர்யா தனது உடலை ஃபிட்டாக மாற்றி வரும் புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் செம வைரலானது . மேலும் இந்த படத்தின் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா நடிக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது இயக்குநரான பா. ரஞ்சித் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாக்ஸிங் செய்வதை போன்று ஒரு போஸ் கொடுத்தப்படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் குத்து சண்டை நிறைந்த படத்தை இயக்குவதால் நீங்களும் பாக்ஸிங் கற்று கொள்கிறீர்களா என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…
திருச்சி : டெல்லி பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வக்பு சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவின்படி, தற்போதுள்ள…
சென்னை : இலங்கை அதிபர் அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி இன்று இலங்கைக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார்.…
டெல்லி : நேற்று (ஏப்ரல் 3) டெல்லியில் ஸ்டார்ட் அப் மகா கும்பமேளா 2025 நிகழ்வு நடைபெற்றது. இதில், மத்திய…
சென்னை :நடிகரும் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவருமான விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு, அது தற்போது அமலுக்கு…
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) ககன்யான் பணிக்கான 'முதன்மை' விண்வெளி வீரராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட குரூப்…