டிக்டாக்குக்கு மாற்றாக இன்ஸ்டாகிராமில் வரும் புதிய வசதி.. இன்று மாலை 7.30 மணி முதல்!!

Published by
Surya

டிக்டாக்கிற்கு மாற்றாக பல செயலிகளை மக்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், இன்ஸ்டாகிராம் “ரீல்ஸ்” (Reels) எனும் வசதியை அறிமுகப்படுத்தியது. 

இந்திய மற்றும் சீனப் படைகள் கிழக்கு லடாக்கில் ஜூன் 15 -ம் தேதி மோதலில் ஈடுபட்டுள்ளன. இந்த மோதலில் 20 இந்திய வீரர்களின் வீரமரணம் அடைந்தனர். சீன வீரர்களும் கொல்லப்பட்டனர். ஆனால் சீனா தனது இறந்த வீரர்களின்விவரத்தை இன்னும் அதிகாரபூர்வமாக இன்னும் தெரிவிக்கவில்லை.

அதுமட்டுமின்றி, சீனா மொபைல் செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்துக்கொண்டே வந்தது. இதன்காரணமாக, டிக் டாக், ஷேர் இட், ஹலோ, லைக், யூசி பிரவுசர், உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, அந்த செயலிகளை பிளே ஸ்டார் மற்றும் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

மேலும், டிக்டாக் செயலி தடைசெய்ததை தொடர்ந்து, அதற்க்கு மாற்றான செயலிகள் வந்தாலும், டிக்டாக்கை போல வரவில்லை என பயனர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி, டிக்டாக்கின் இந்த இடத்தை பிடிப்பதற்கு, பல புதிய செயலிகள் வந்துகொண்டே இருக்கின்றது.

இந்நிலையில், பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம் செயலி, இதுவரை பலகோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது, அதனால், இந்த செயலியில் “ரீல்ஸ்” (Reels) எனும் வசதியை அறிமுகப்படுத்தியது. அதன்மூலம், உலகளவில் நட்சத்திரங்களை உருவாக்கலாம் என பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குனர் அஜித் மோகன் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, இன்று இரவு 7.30 மணி முதல் இந்த வசதி உங்கள் இன்ஸ்டாகிராம் செயலியில் வரும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து தெரிவித்த அவர், இந்த ரீல்ஸில் டிக்டாக் செயலி போலவே, பின்னணி இசையில் 15 நொடிகள் விடியோவாக பதிவிட்டு நடிக்கலாம். பிரேசிலில் சோதனை முயற்சிக்காக இந்த சேவை அறிமுகமானதை தொடர்ந்து, பிரான்ஸ், ஜெர்மனியிலும் அறிமுகமானது.

மேலும், இதற்க்கு தேவையான பாடல்களுக்கு பேஸ்புக் நிறுவனம், இந்தாண்டு ஜூன் மாதம் முதல் இசை நிறுவனமான சரேகாமாவுடன் உலகளாவிய உரிம ஒப்பந்தத்தை கையெழுத்திட்டது. அதன் மூலம், 25-க்கும் மேற்பட்ட மொழிகளில் திரைப்படம், பக்தி, ஆல்பம், இசை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் 100,000 க்கும் மேற்பட்ட பாடல்களுக்காக ஒப்பந்தப் செய்யப்பட்டது.

அதுமட்டுமின்றி, இந்தியாவில் சிறந்த இசை நிறுவனங்களாக டி-சீரிஸ், ஜீ மியூசிக், உள்ளிட்ட நிறுவனங்களில் தொடர்பு கொண்டுள்ளது. இதன் மூலம் அந்த வசதி மூலம் வீடியோ பதிவிடும் நபர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் இருக்கும் என அவர் தெரிவித்தார். மேலும், இந்த சேவையை சோதிக்கும் நான்காம் நாடு “இந்தியா” எனவும் அவர் தெரிவித்தார்.

Published by
Surya

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

1 hour ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago