புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுக்குள் தான் உள்ளது! – WHO
அனைத்தும் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதாவது சூழல் நமது கட்டுப்பாட்டை மீறி இல்லை என்பதுதான் உண்மை மருத்துவர் மைக்கேல் ரேயான் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் பரவியுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாக, அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த கொரோனா வைரஸ் ஆனது உருமாறி உள்ள நிலையில், இதன் பரவும் வேகம் 70% அதிகமானது என்றும், இந்த வைரஸ் கட்டுப்பாட்டில் இல்லை என்றும் பிரிட்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, இந்த வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பின் அவசரகால பிரிவின் தலைவர் மருத்துவர் மைக்கேல் ரேயான் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உலகில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆனால், அனைத்தும் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதாவது சூழல் நமது கட்டுப்பாட்டை மீறி இல்லை என்பதுதான் உண்மை. உருமாறிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த சரியான வழி முறைகள் கையாளப்பட்டு வருவதாகவும், நாம் இப்போது செய்து கொண்டிருப்பது தொடர்ந்து செய்தால் போதுமானது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இன்னும் சற்றுக் தீவிரத் தன்மையுடன் நீண்டகாலத்துக்கு செய்வது, வைரஸ் பரவலை கட்டுக்குள் வைக்கும் என்றும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் சில நாடுகளில் வைரஸ்களை கட்டுப்படுத்தும் தீவிரமான நடவடிக்கைகள், கடினமான கட்டுப்பாடுகள் தேவை அப்போதுதான் இந்த புதிய கொரோன வைரஸ் சற்று வீரியத் தன்மை உள்ளதாக இருந்தாலும், அதை நம்மால் தடுத்து நிறுத்த முடியும் என தெரிவித்துள்ளார்.