தளபதி 65- யில் இணைந்த பிரபலம்..யார் தெரியுமா..?

தளபதி விஜயின் 65 வது திரைப்படத்தில் ஸ்டண்ட் பயிற்சியாளராக அன்பறிவு பணியாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியியகியுள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் நடிகர் விஜயின் 65 வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். அந்த படத்தை சன்பிக்கர்ஸ் தயாரிக்கவுள்ளது. மேலும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திற்க்கான படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூலை மாதத்திற்குள் முடித்து விட்டு அண்ணாத்த திரைப்படத்திற்கு முன்பாகவே வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்களாம். அதைபோல் தற்போது இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தில் ஸ்டண்ட் பயிற்சியாளராக அன்பறிவு பணியாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியியகியுள்ளது. இவர் கபாலி, கே.ஜி.எப், கைதி, போன்ற படங்களில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 40ஆக உயர்வு.!
April 28, 2025