புதிய புற்று நோய் மருத்துவ கண்டுபிடிப்புக்கு நிதி திரட்டும் நெதர்லாந்த் நாட்டவர்….!!
கொடிய வகை புற்று நோய்க்கு மருந்து கண்டுபுடிக்கும் ஆராய்ச்சி செலவுக்கு நிதி திரட்ட சைக்கிள் மூலம் உலகை சுற்றி வருகின்றனர் நெதர்லாந்த் நண்பர்கள்.
நெதர்லாந்த் நாட்டை சேர்ந்தவர் சர்க்கோமா எனும் இளம் பெண் புதிய கொடிய அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார். இந்த வகை கொடிய புற்று நோய்க்கு இதுவரை மருத்துவத்துறையில் மருந்து கண்டுபிடிக்கவில்லை.
இந்நிலையில் உயிரைக்கொல்லும் அந்த புற்றுநோய் மருந்து ஆராய்ச்சிக்கு தேவையான நிதி திரட்ட நெதர்லாந்து நாட்டை சேர்ந்த நண்பர்கள் ஒவ்க்கர், ஹெல்கின் உலக நாடுளிடையே சைக்கிளில் சென்று நிதி திரட்ட முடிவு செய்தனர்.
இதையடுத்து கடந்த 260 நாட்களில் இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், கிரீஸ், துருக்கி, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் உள்ளிட்ட சுமார் 24 நாடுகளில் சைக்கிளில் தங்களது பயணித்த தொடங்கிய அவர்கள் இந்தியா வந்துனர். இந்தியாவில் அவர்கள், பொள்ளாச்சி, கோவை வழியாக கர்நாடக செல்ல திட்டமிட்டுள்ளனர்.