#BREAKING: உலக நாடுகள் 2வது நாளாக வேடிக்கை பார்க்கின்றன- உக்ரைன் அதிபர் வேதனை..!
ரஷ்யா நடத்தும் தாக்குதலை உலக நாடுகள் 2வது நாளாக வேடிக்கை பார்க்கின்றன என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வேதனை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புடின் நேற்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து நேற்று காலை முதல் போர் தொடங்கியது. இந்த போரில் உக்ரைனில் உள்ள ராணுவ நிலைகள், விமான தளங்கள், ராணுவ கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இரண்டாவது நாளாக ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி கூறுகையில், உலகின் சக்தி வந்த நாடான ரஷ்யாவை நேற்று எப்படி தனியாக எதிர்த்தோமோ, அதேபோலதான் 2-வது நாளான இன்றும் தனியாக எதிர்த்து வருகிறோம். உலகின் பிற சக்திவாய்ந்த நாடுகள் எல்லாம் வேடிக்கை மட்டுமே பார்த்து வருகிறது. பொதுமக்கள் வாழும் குடியிருப்புகளில் மீது வாக்குறுதியை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது.
மேற்கத்திய நாடுகள் எங்களை முற்றிலுமாக கைவிட்டுள்ளது. இதை எதிர்பார்த்தோம் என்றாலும் கூட அதிக வேதனையை தருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போருக்கு எதிராகவும், உக்ரைனுக்கு ஆதவாகவும் ரஷ்யாவில் போராட்டம் நடத்தும் மக்களுக்கு மனமார்ந்த நன்றி என தெரிவித்தார்.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் ஆலோசனை நடத்தி வருவதாக ரஷ்ய அதிபர் அலுவலகம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் பிரான்ஸ் உள்ள நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் மேக்ரான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.