பிரபல நடிகையின் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்.!

Default Image

நடிகை கங்கனா ரணாவத் வீட்டில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவில் நடித்து பிரபலமானவர் கங்கனா ரணாவத். இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம்தூம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனையடுத்து ஹிந்தி பக்கம் சென்று முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது தமிழில் ஏ. எல். விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என்ற ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இவர் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருகிறார். ஆம் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு பாலிவுட் தான் காரணம் என்றும், அதனுடன் நெப்டோடிஸம் குறித்தும், இயக்குநர் கரண் ஜோஹர் உள்ளிட்ட பலரை விமர்சனம் செய்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் இவர் மகாராஷ்டிர முதல்வர் மற்றும் அவரது மகனை விமர்சித்து பேசியுள்ளார். இந்த நிலையில் மணாலியில் வசித்து வரும் அவரது வீட்டில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் நேற்றிரவு 11.30 மணிக்கு சுட்டதாக புகார் அளித்துள்ளார். முதல்வர் மற்றும் மகனை குறித்து பேசியதால் அவர்கள் பயமுறுத்துவதாகவும், இதற்கெல்லாம் பயரமாட்டேன் என்றும், தொடர்ந்து எனது கருத்துக்களை தெரிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். மேலும் நான் வீட்டில் தூக்குபோட்டு இறந்தால் கூட அது தற்கொலை இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 16042025
mayank yadav brother
Actor Sri
TN CM MK Stalin speech in TN Assembly
Edappadi Palaniswami
PMK Leader Anbumani ramadoss Press meet
Jitesh Sharma