44 நாடுகளில் இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் பரவியுள்ளது…! – WHO
44 நாடுகளில் இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் பரவியுள்ளது என WHO தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது.இந்த உருமாறிய கொரோனா வைரஸ், இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் பரவலாக காணப்படும் உருமாறிய கொரோனா வைரஸ், உலக அளவில் 44 நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், இதுவரை 4500 மாதிரிகள் கண்டறியப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவை தவிர்த்து இந்தியாவில் காணப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் பிரிட்டனில் தான் அதிகமாக காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் பரவிவரும் வகை உருமாறிய கொரோனா வைரஸ், வேகமாக பரவும் தன்மை கொண்டது. இந்த வைரஸ் பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் அதிகமாக காணப்படும் நிலையில், இந்த வைரஸ் ஆனது முதலில் பரவிய வைரஸ்களை விட அதிகமான ஆபத்து நிறைந்ததாகவும், வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும் அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது எனவே தான் இது உலக நாடுகளுக்கு வேகமாக பரவுகிறது.
இந்த வைரஸ் குறித்த முதல்கட்ட ஆய்வில், உருமாற்றம் அடைந்த இந்த கொரோனா வைரஸ் அதிக ஆற்றல் உள்ளதாகவும், தடுப்பூசிகளை செயலிழக்க செய்து, எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகளால் குறைந்த அளவுதான் உருமாறியகொரோனா வைரஸ்களில் இருந்து பாதுகாப்பு அளிக்க முடியும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் இந்த வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், அரசு மதரீதியான நிகழ்வுகளை அனுமதித்தது, அரசியல் ரீதியான கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள் மூலம் மக்கள் கூடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தியது,கொரோனா தடுப்பு நடைமுறைகளான சமூக விலகல், முக கவசம் அணிதல் போன்றவற்றை மக்கள் தவிர்த்தது இதுதான் இந்த வைரஸ் வருவதற்கு முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் பிரிட்டனில் பரவியுள்ள மிகப்பெரிய ஆபத்தையும், தீவிரமான பரவலையும் ஏற்படுத்தக்கூடிய வைரஸ் இந்தியாவில் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.