“திரையுலகை ஆண்டது போதும், தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே ” – போஸ்ட்ரை ஒட்டி ஏற்படுத்திய சூர்யா ரசிகர்கள்.!
திரையுலகை ஆண்டது போதும், தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே ” என்ற வாசகங்களுடன் கூடிய போஸ்ட்ரை சூர்யா ரசிகர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் வழக்கமாக போஸ்ட்ர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். சமீபத்தில் கூட மதுரையில் தளபதி ரசிகர்கள் விஜய் மற்றும் சங்கீதாவின் திருமண நாளை முன்னிட்டு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை போன்று சித்தரித்தும், மாஸ்டர் படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திரையரங்குகள் திறப்பது குறித்தும் போஸ்ட்ர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். அதே போன்று அஜித் ரசிகர்களும் தியேட்டரில் வலிமை படம் திரையிடப்படும் வரை வேறு எந்த படத்தையும் பார்க்க மாட்டோம் என்று கூறி போஸ்ட்ர்களை ஒட்டினர்.
இந்த நிலையில் தற்போது சூர்யா ரசிகர்களும் சூர்யாவை அரசியலில் களமிறங்க கோரி போஸ்ட்ர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அதில் சூர்யாவை சேகுவாரா போல சித்தரித்து தமிழக சட்டமன்றத்தின் படத்தையும் இடம்பெற செய்து ‘திரையுலகை ஆண்டது போதும், தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே’ என்ற வாசகங்களுடன் போஸ்ட்ர் ஒட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்ட்ர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.