இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் காலமானார்…!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் வயது முதிர்வால் காலமாகியுள்ளார்.
இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் அவர்கள் பிரதமராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் இவரது தாயார் சார்லட் ஜான்சனுக்கு 79 வயது ஆகிறது. உடல் நலக் குறைவு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் தனது தயார் குடும்பத்தில் உயரிய அதிகாரம் படைத்தவர் என ஒரு நிகழ்வில் தாயாரை புகழ்ந்து கூறியுள்ளார். இந்நிலையில், இன்று பிரதமர் போரிஸ் ஜான்சனின் தாயார் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.