தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதை தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ள இருந்த பெண்ணிற்கு அவரது மாமியார் அவரும் கர்ப்பமாக இருப்பதாக இவர்கள் அறிவிப்பதற்கு முன்பதாகவே அறிவித்தது சோகத்தை ஏற்படுத்தியது என பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பெண்மணி ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது வாழ்வில் நடந்த ஒரு மோசமான நிகழ்வு என்று கூறி பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் கொரோனா காலகட்டமாக இருந்ததால் கடந்த வருடம் தனது திருமணம் மிக எளிமையான முறையில் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியும்படி மட்டுமே நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார். அதன் பின்பு திருமண வரவேற்பு நிகழ்ச்சி சற்று உறவினர்களுக்கு கூறி சில நாட்களுக்குப்பின்பதாக நடத்தப்பட்டதால் அப்போது அந்தப் பெண்மணி கர்ப்பமாக இருந்துள்ளார். எனவே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வைத்து தான் கர்ப்பமாக இருப்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என அந்தப் பெண்மணி விரும்பியுள்ளார்.
உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி இருக்கும் பொழுது அனைவருக்கும் சாப்பாடு பகிரப்பட்டு கொண்டு இருந்துள்ளது. அப்பொழுது அந்தப் பெண்மணியின் கணவரின் தாயார் அதாவது அப்பெண்மணியின் மாமியார் பேசுவதற்காக மைக்கை எடுத்துள்ளார். அனைவரும் சாப்பிடும் பொழுது தனது மாமியார் தங்களைப் பற்றி பெருமையாக சொல்ல போகிறார் என அந்தப் பெண்மணி நினைத்துள்ளனர். அனைவரும் சாப்பிடும் பொழுதும் பேசுவது நன்றாக இருக்கும் எனவும் நினைத்துள்ளார்.
ஆனால் அந்தப் பெண்மணியின் மாமியார் இவர்கள் புதுமண தம்பதிகள் பற்றி பேசாமல் தான் கர்ப்பமாக இருப்பதாக அனைவர் முன்னிலையிலும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண்மணி கூறுகையில் தங்களைப் பற்றி பெருமையாகக் கூறுவார் என நினைத்து தான் பேசட்டும் என அனுமதி அளித்தோம். ஆனால் இப்படி ஒன்றை செய்வார் என நினைத்து பார்க்கவில்லை. அந்த நாளில் அனைவரது கவனமும் என் பக்கம் இருக்க வேண்டும் என நினைத்தேன். ஏற்கனவே எளிமையாக நடைபெற்ற திருமண வரவேற்பு அவர்களுக்கு சாதகமாக அமைந்து எனக்கு மோசமான நாளாக மாறிவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : தமிழகத்தில் இன்று (மார்ச் 4) முதல் மார்ச் 8ம் தேதி வரை அதிகபட்ச வெப்ப நிலை இயல்பை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று முதல் அரையிறுதி போட்டி துபாய் சர்வதேச…
சென்னை : திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியில் அண்ணாநகரை சேர்ந்தவர் சுபலட்சுமி, இவரது கணவர் கிருஷ்ணமூர்த்தி 6 ஆண்டுகளுக்கு முன்னரே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. இந்த போட்டியை அரையிறுதி…
சென்னை : நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பாலியல் குற்றசாட்டை முன்வைத்து புகார் அளித்து…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக…