வாட்சப்பில் அதிகம் முறை பகிரப்படும் செய்திகளின் பகிர்வு 70% குறைந்துள்ளது!
வாட்சப்பில் அதிகம் பகிரப்படும் தகவல்கள் 70% குறைந்துள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வாட்சப் செயலியானது பல நல்ல தகவல்களை பகிர்வதற்கு மிகவும் உதவியாக உள்ளது. அதே வாட்சப் செயலி மூலம் பல வதந்தியான செய்திகளும் பரவி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொடர்பாக பல வதந்தியான செய்திகள் பரவி வந்ததை தடுக்கும் வகையில், வாட்சப் நிறுவனம் கடந்த 7-ம் தேதி ஒரு புது கட்டுப்பாட்டை கொண்டுவந்தது.
அந்த கட்டுப்பாட்டின்படி, பயனர்களால் அதிகம் முறை பகிரப்பட்டதாக கண்டறியப்படும் செய்திகளை, ஒரே நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே பகிர முடியும் என்பது தான். கொரோனா வைரஸ் குறித்த வதந்தியான செய்திகளை பரப்புவதை தடுக்கும் வகையில், வாட்சப் நிறுவனம் விதித்த இந்த கட்டுப்பாட்டால், 70% இப்படிப்பட்ட செய்திகள் பகிரப்படுபவது குறைந்துள்ளதாக, வாட்சப்பை நிர்வகிக்கும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.