அசுரன் கதையை 4 நடிகர்கள் நிராகரித்த பின்னர் தான் தனுஷ்க்கு வந்தது என்று இயக்குனர் வெற்றி மாறன் கூறியுள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அசுரன். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் மாபெரும் வெற்றி பெற்று நல்ல வசூல் சாதனை படைத்தது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிறந்த தமிழ் திரைப்படம் அசுரன் என்றும், சிறந்த நடிகர் தனுஷ் என்றும் தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தேசிய விருது பெற்றதை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் கூறுகையில், “அசுரன் படத்தில் தேசிய விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் என்னை நம்பி நடித்தார். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய இடத்தை பிடித்ததற்கு காரணம் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. முதலில் இந்தத் திரைப்படத்தின் கதையை நான் 4 நடிகர்களிடம் கூறினேன் அவர்கள் நிராகரித்த பின்னர் தான் நடிகர் தனுஷிடம் கூறினேன். கதையைக் கூறியவுடன் தனுஷுக்கு மிகவும் பிடித்துவிட்டது. நடிகை மஞ்சு வாரியர் இந்த திரைப்படத்தை குடும்பப் படமாக மாற்றினார்” என்றும் புகழ்ந்து பேசியுள்ளார்.
சென்னை : இந்த கோடை மிகவும் வெப்பமாக இருக்கும், இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்கள் இருக்கும், இது…
பெங்களூர் : இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி விவர பட்டியலில் முதலிடத்தில் இருந்த…
சென்னை : நேற்றைய தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்றதில் இருந்து டோனால்ட் டிரம்ப், அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை அறிவித்து வருகிறார். அப்படி…
டெல்லி : உலக நாடுகளுக்கு எதிராக பரஸ்பர வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்தினார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப். அவர்,…
அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு எதிராக புதிய அதிரடியான வரி உத்தரவை…