“ஓ மண பெண்ணே” படத்தின் முதல் பாடலை வெளியிட்ட அசுரன் தனுஷ்..!

ஓ மண பெண்ணே திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு தருண் இயக்குனர் பாஸ்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் தேவர்கொண்டா மற்றும் நடிகை ரீத்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பெல்லி சூப்புலு இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இந்த படத்தை தற்போது தமிழில் இதற்கு ஓ மண பெண்ணே என்ற டைட்டில் வைத்து இயக்குனர் கார்த்திக் சுந்தர் ரீமேக் செய்கிறார். இவர் இயக்குனர் ஏ எல் விஜய்யிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.
இந்த தமிழ் ரீமேக்கில் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்துக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்கு பிறகு மீண்டும் படத்திற்கான படப்பிடிப்பை தொடங்கி முடிக்கப்பட்டுள்ளது. படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் என வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
படத்திற்கான ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்ததை தொடர்ந்து தற்போது அந்த பாடலை நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பாடல் தற்போது ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது.
Happy to release the #LazySong from #OhManapenne https://t.co/oSlARDyYm0
All the best to @iamharishkalyan @priya_Bshankar @KaarthikkSundar @Composer_Vishal & team
— Dhanush (@dhanushkraja) February 26, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025
சிறுமி உயிரிழப்பு எதிரொலி : மழலையர் பள்ளி உரிமம் ரத்து!
April 30, 2025