முடங்கியிருக்கும் உலகில் குரங்கு ஒன்று தனக்கு உணவு தந்தவருக்கு செலுத்திய புன்னகை நன்றி இணையத்தை உலுக்கும் புகைப்படமாக வலம் வருகிறது.
உலகம் முழுவதுமே கொரோனா வைரஸால் கதி கலங்கி இயங்காமல் நின்று கொண்டிருக்கிறது. வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை, உணவில்லா தவிப்பு மற்றும் பல இடங்களில் ஊரடங்கு என அனைத்துலகும் முடங்கியுள்ளது.
இந்த சூழ்நிலையில் உணவின்றி தவிக்கும் மனிதர்களுக்கு சில தன்னார்வலர்கள் தங்களால் முயன்ற உணவு பொருள்கள் மற்றும் வாழ்வாதாரத்துக்கான தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், மனிதர்களை கவனித்து கொள்ளவே பிறர் தேவைப்படுகையில், விலங்குகளை யார் கவனிப்பார்கள்? இருப்பினும், சில நல்ல உள்ளம் கொண்டவர்கள் விலங்குகளை தேடி சென்று உணவளிப்பதையும் வழக்கமாக தற்பொழுது செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வழியில் காரில் சென்று கொண்டிருந்த நபர் ஒருவரது கண்ணாடி ஜன்னல் பக்கமாய் குரங்கு சென்று நிற்க, அவர் அந்த குரங்குக்கு பழம் ஒன்றை கையில் கொடுக்கிறார். அதை வாங்கிக்கொண்ட அந்த குரங்கு நன்றியை தனது புன்னகையால் தெரிவிக்கிறது.
இந்த குரங்கின் புன்னகை புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இதன் மூலம் இந்த உலகம் மனித உயிர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல, உயிர் வாழ வேண்டிய விலங்குகளும் இவ்வுலகத்தில் உள்ளது என நமக்கு வெளிச்சம் போட்டு காண்பிக்கிறது. இதோ அந்த அழகிய புகைப்படம்,
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த…
சென்னை : பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி இடையே வார்த்தை மோதல்…