"ஆட்டம் காணும் மோடி அரசு"விசாரணைக்கு வருகிறது ரபேல் ஊழல்..!!

Default Image

புதுதில்லி:
இந்தியா, பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான ரபேல் போர் விமான ஒப்பந்தத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனு வரும்  10-ம்தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.
வழக்கறிஞர் வினீத் தண்டா என்பவர் தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், ரபேல் போர் விமானத்தின் விலை, ஒப்பந்த விவரம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி  அரசில் நிர்ணயிக்கப்பட்ட விலை,பாஜக அரசில் நிர்ணயம் செய்யப்பட்ட விலை ஆகியவற்றை சீல் வைக்கப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
மற்றொரு வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர், பிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்க இருக்கும் ரபேல் போர் விமான பேரத்தில் பல முறைகேடுகள் நடந்துள்ளது. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம் நடந்துள்ளது. ஆதலால் விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதற்கிடையே கடந்த மார்ச் மாதம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தெஹ்சீன் பூனாவாலா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், பாதுகாப்புத் தளவாடங்கள் வாங்குவதற்கு முன், ஏன் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படவில்லை; இதை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த அனைத்து மனுக்களும் வரும் 10-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் முன் விசாரணைக்கு வருகிறது.5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சுழலில் இந்த வழக்கு விசாரணையை எதிர்க்கட்சிகள் தேர்தல் பிரச்சார ஆயுதமாக எடுத்துக் கொள்ளும் என்பதால் மோடி அரசு ஆட்டம் கண்டுள்ளது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்