தமிழகத்தில் பாகுபலி திரைப்படத்தின் ஷேர் சாதனையை விஜயின் மாஸ்டர் திரைப்படம் முறியடித்துள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பொங்கல் தினத்தனத்தை முன்னிட்டு கடந்த மாதம் 13 ஆம் தேதி திரையரங்குகளில் 50 % இருக்கைகளுடன் வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும், விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனனும் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உலகளவில் 250 கோடியும், தமிழகத்தில் 141 மேல் வசூல் செய்து வெற்றிநடை போட்டு வருகிறது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு 50 % பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டு திரையரங்குகளில் முதன் முதலாக மாஸ்டர் படம் தான் வெளியானது. இந்த படம் வெளியாகி விநியோகத்தஸர்கள், மற்றும் தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை கொடுத்துள்ளது.
மாஸ்டர் திரைப்படம் தற்போது புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது ஆம், வெளியாகி 19 நாட்களில் தமிழகத்தில் மாஸ்டர் படத்திற்கு 80 கோடி ஷேர் வந்துள்ளதாம். பாகுபலி திரைப்படத்திற்குதமிழகத்தில் மொத்தமாகவே 78 கோடி ஷேர் வந்துள்ளது. மேலும் தமிழகத்தில் அதிகம் ஷேர் வந்த திரைப்படங்களின் பட்டியலில் முதலிடத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான பிகில் திரைப்படம் 83 கோடியும் இரண்டாவது இடத்தில் மாஸ்டர் திரைப்படம் பாகுபலியின் சாதனையை முறியடித்து வந்துள்ளது. இன்னும் சில நாட்களில் பிகில் சாதனையை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இன்று (நவம்பர் 16) முதல் வரும் நவம்பர் 21 வரையில் 6 நாள்…