இந்திய அளவில் அதிக டிஸ் லைக்குகளை மாஸ்டர் டிரைலர் பெறும்.! மீரா மிதுனின் சர்ச்சை ட்வீட்.!

Default Image

வாரிசு நடிகரான விஜய்யின் மாஸ்டர் டிரைலர் இந்திய அளவில் அதிக டிஸ் லைக்குகளை பெற்ற டிரைலராக மாஸ்டர் டிரைலர் இருக்கும் என்று மீரா மிதுன் கூறியுள்ளார்.

நடிகர் விஜய், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் மாஸ்டர்.இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர். அனிருத்தின் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் டிரெண்டிங்கில் உள்ளது.

ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த படம் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலரை தான். எப்போது மாஸ்டர் படத்தின் டிரைலர் வெளியானாலும் அதனை வைரலாக்க ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக விஜய் மற்றும் சூர்யாவை குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வரும் மீரா மிதுன் மாஸ்டர் டிரைலர் குறித்து பகிர்ந்த ட்வீட் ஒன்று ரசிகர்களை மீண்டும் கடுப்பாக்கி உள்ளது.

சமீபத்தில் வாரிசு நடிகையான ஆலியா பட்டின் ‘சதக்2’ படத்தின் டிரைலர் ஒரே நாளில் 6 மில்லியன் டிஸ் லைக்குகளை பெற்றிருந்தது. அதே போன்று வாரிசு நடிகரான விஜய்யின் மாஸ்டர் படத்தின் டிரைலரும் இந்திய அளவில் அதிக டிஸ் லைக்குகளை பெறும் என்று கூறியுள்ளார். இந்த ட்வீட்க்கு பலர் நெகட்டிவ் கமென்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்