மாஸ்டர் படம் தான் பாகுபலி 2 சாதனையை முறியடிக்கும்.!
பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை மாஸ்டர் படம் தான் முறியடிக்கும் என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியில் உச்சத்தில் இருக்கக்கூடிய நடிகர் விஜய் . இவருக்கு உலகம் முழுவதும் எவ்வளவு ரசிகர்கள் என்று சொல்லியே தெரிய வேண்டாம், இந்த நிலையில் தற்பொழுது விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் தியேட்டர் திறக்கப்பட்டாலும் விஜய்யின் ‘மாஸ்டர்’ பட வெளியீட்டை ஒத்திவைக்க வேண்டும் முதல் படமாக மாஸ்டர் படம் திரையிடப்பட்டால் விஜய்க்கு மட்டுமல்ல விஜய் ரசிகர்களுக்கும் அது கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என்றும் திரையரங்கு உரிமையாளர் கேயார் முதல்வருக்கு கோரிக்கை வைத்தது அனைவரும் அறிந்ததே.
இந்த நிலையில் இவர் அன்மையில் ஒரு பேட்டியில் கூறியிருப்பது, நடிகர் விஜய் தான் தற்போது பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றும் , அவர் தான் தமிழகத்தில் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 வும், அவருக்கு பிறகுதான் மற்ற நடிகர்கள் என அவர் கூறியுள்ளார். அடுத்ததாக பேசிய இவர் பாகுபலி 2 படத்தின் வசூல் சாதனையை மாஸ்டர் படம் தான் முறியடிக்கும் என்று கூறியுள்ளார்.