வலிமை படத்தின் அப்டேட்டை கொடுத்த மாஸ்டர் பிரபலம்…!
வலிமை படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டதாகவும், விரைவில் அப்டேட் வெளிவரும் என்றும் அப்படத்தில் சிறு வேடத்தில் நடித்துள்ள மாஸ்டர் பட நடிகையான சங்கீதா தெரிவித்துள்ளார்.
நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார்.நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளது .அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . மேலும் இந்த படத்தில் ஹூமா குரேஷூ நாயகியாகவும் ,கார்த்திகேயா வில்லனாகவும்,அம்மாவாக நடிகை சுமித்ராவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் யோகி பாபு,பேர்லி மன்னி,குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பலர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை .யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பானது வெளிநாடுகளில் நடத்த உள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரு அப்டேட் கூட படக்குழுவினர் தரவில்லை இதனால் அஜித் ரசிகர்கள் சோகத்துடன் வலிமை அப்டேட் கேட்டு வருகிறார்கள்.இந்த நிலையில் தல அஜித்தின் வலிமை படம் குறித்த அப்டேட்டை மாஸ்டர் பட நடிகை சங்கீதா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.அவர் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யின் நண்பராக மது என்ற கதாபாத்திரத்தில் மருத்துவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் அளித்த பேட்டியில் தான் வலிமை படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறிவிட்டு 99% படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாகவும்,கூடிய விரைவில் அப்டேட் வெளிவரும் என்றும் கூறியுள்ளார்.அதனுடன் தல அஜித்துடன் நடிக்கும் காட்சிகள் தனக்கு கிடைக்கவில்லை என்றும் ,எச்.வினோத் உடன் பணியாற்றியது மிகப் பெரிய அனுபவமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Last day an interview on #Behindwoods
About #Valimai ????????♀️@BoneyKapoor
pic.twitter.com/D63QMn26LW— Sangeetha.V ✨ (@SangeethaV_Offi) February 9, 2021