அன்று டீ கடையில் பணி புரிந்தவர் இன்று முதலாளி! எப்படி?

சமூகவலைத்தளம் என்பது இன்று பலரின் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்த ஒரு மூல காரணமாக உள்ளது. அந்த வகையில், பாகிஸ்தானை சேர்ந்த அர்ஷத் கான் என்பவர் ‘chaiwala ‘ என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். இவரது வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது சமூக வலைத்தளம் தான்.
எப்படியெனில், அர்ஷத் கான் டீக்கடையில் பணிபுரிந்தவர். இவர் 2016-ம் ஆண்டு ஜியா அலி என்பவர் எடுத்த புகைப்படத்தின் மூலம் இணையத்தில் வைரலானார். இந்த புகைப்படம் தான் அவரது வாழ்க்கையை மாற்றியுள்ளது. அவரது நீலநிற கண்கள் தான் அவர் இணையத்தில் வைரலாக காரணம். இந்த புகைப்படம் இணையத்தில் வைராலான பின், இவருக்கு சில மாடலிங் வாய்ப்புகளும் கிடைத்துள்ளது.
இந்நிலையில், தற்போது இவர், இஸ்லாமாபாத்தில் சொந்தமாக கஃபே ஒன்றை தொடங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘பலரும் Chaiwala என்ற பெயரை நீக்குமாறு கூறினர். ஆனால் நான் அதனை ஏற்கவில்லை. அது எனக்கான அடையாளம். மேலும், எனது கடையின் சிறப்பு என்னவென்றால் இது பாரம்பரியமானது’ என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இவருக்கு மக்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025