மாஸ்க் விவகாரத்தில் ஒருவரை கொலை செய்தவர் ஷெரீப் துணையாளரால் சுட்டு கொலை!

Default Image

மாஸ்க் அணியவில்லை என்று இருவருக்குள் வந்த விவகாரத்தில் ஒருவரை குற்றியதாக சந்தேகிக்கப்படும் நபரை ஷெரீப்பின் துணை ஒருவர் சுட்டு கொன்றுள்ளார் என போலீசார் கூறியுள்ளனர்.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில், அமெரிக்காவில் தான் பாதிப்பும் உயிரிழப்பும் அதிகமாக உள்ளது. இருந்த போதிலும் அமெரிக்காவின் பெரிய நகரங்களில் ஒன்றாகிய மிச்சிகனில் உள்ள டெட்ராய்ட் பகுதியிலுள்ள ஒரு கடைக்குள் மாஸ்க் அணியவில்லை என்று வந்த பிரச்சனையால் ஒருவர் மற்றொருவரை கத்தியால் குத்தியுள்ளார்.

குத்தப்பட்டவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரை கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை ஷெரீப்பின் துணை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளதாக போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்