தமிழரின் முக்கிய திருநாளாம் தமிழ் புத்தாண்டு.!

Default Image

தமிழ் புத்தாண்டு உலகில் உள்ள அனைத்து தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு முக்கிய திருநாளாகும். இந்த புத்தாண்டு என்பது சாதி, மத, இன, பேதம் இல்லாமல் அனைத்து  தமிழர்கள் என்ற ஓற்றுமை உணர்வுடன் கொண்டாடபடும் முக்கிய திருநாளாகும்.

இந்த திருநாளின் முதல்நாள் வீடு வாசலை சுத்தம் செய்து புத்தாண்டு காலையில் மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை, பாக்கு, ஆகியவை  பூஜையில் வைத்து வழிபாடு செய்வார்கள்.

புத்தாண்டு காலையில் குளித்து விட்டு வாசலுக்கு கோலமிட்டு புத்தாடை அணிந்து, கோயிலுக்குச் சென்று தமிழர்கள் வழிபடுவது வழக்கம். புத்தாண்டு அன்று வீட்டில் பலகாரங்களை செய்து புத்தாண்டு தினத்தில் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினருக்கு கொடுப்பது வழக்கம்.

புத்தாண்டு தினத்தில்  வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் ஆசி பெற்று, குறித்த சுபவேளைகளில் கைவிசேடம்  பெறுவர். மூத்தவர்களால் இளையவர்களுக்கு, புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கப்படும் பணமே கைவிசேடம்  என்று சொல்ல படுகிறது.

புத்தாண்டு தினத்தில்  போர்த்தேங்காய் உடைத்தல், வழுக்கு மரம் ஏறல் , யானைக்குக் கண் வைத்தல், கிளித்தட்டு, ஊஞ்சலாடல், முட்டி உடைத்தல், வசந்தனாட்டம், மகிடிக்கூத்து, நாட்டுக்கூத்து பாரம்பரிய இலங்கையில் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் புத்தாண்டுக் கலையாடல்கள் ஆகும். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்